உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தி.மலை துர்க்கையம்மன் கோவிலில் குத்து விளக்கு பூஜை

தி.மலை துர்க்கையம்மன் கோவிலில் குத்து விளக்கு பூஜை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நகர காவல் தெய்வமான துர்க்கையம்மனுக்கு, தை மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு, 108 குத்து விளக்கு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு, துர்க்கையம்மனுக்கு சிறப்பு அபி ?ஷகம் மற்றும் பூஜை நடந்தது. பின்னர், துர்க்கையம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பெண்கள் 108 குத்து விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர். இதில், ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !