ஈஷா மையம் சார்பில் ஆதியோகி ரத ஊர்வலம்
ADDED :2444 days ago
புதுச்சேரி:மகா சிவராத்திரியை முன்னிட்டு, ஈஷா யோகா மையம் சார்பில் ஆதியோகி ரதம் ஊர்வலம் புதுச்சேரியில் நேற்று துவங்கியது.கோவை, வெள்ளியங்கிரியில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தின் 25வது ஆண்டு, மகா சிவராத்திரி வரும் மார்ச் 4ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, மகா சிவராத்திரியில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில், புதுச்சேரி பகுதிகளில் மூன்று நாட்கள் ஆதியோகி ரத ஊர்வலம் நடக்கிறது.கருவடிக்குப்பம் சித்தானந்தா சுவாமி கோவிலில் இருந்து நேற்று ரத ஊர்வலம் துவங்கியது, தொடர்ந்து, பாகூர், ஏம்பலம், வில்லியனுார், கண்டமங்கலம், மதகடிப்பட்டு மற்றும் திருக்கனுார் பகுதிகளில் நாளை (3ம் தேதி) வரையில் ரதம் வலம் வருகிறது.