கோதண்டராமர் சிலைக்காக மார்க்கண்டேய நதியில், தற்காலிக சாலை
கிருஷ்ணகிரி: விஸ்வரூப கோதண்டராமர் சிலையை எடுத்துச் செல்வதற்காக, மார்க்கண்டேய நதியில், தற்காலிக சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.கர்நாடக மாநிலம், ஈஜிபுரா பகுதியில், 108 அடி உயரத்தில், விஸ்வரூப கோதண்டராமர் சிலை அமைக்க, அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர்.
சிங்காரப்பேட்டைசிலை செய்ய, 64 அடி உயரம், 26 அடி அகலம் உடைய கல், திருவண்ணாமலை மாவட்டம், கொரக்கோட்டை மலையில், 3.5 லட்சம் கிலோ எடையில், வெட்டி எடுக்கப்பட்டது.முகம், கைகள் மட்டும் வடிவமைக்கப்பட்டன. டிச.,7ல், 240 டயர்களால் வடிவமைக்கப்பட்ட, கார்கோ லாரியில் ஏற்றப்பட்ட சிலை, ஈஜிபுரா புறப்பட்டது. கடந்த, 16ல் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான, சிங்காரப்பேட்டைக்கு வந்தது.கிருஷ்ணகிரியில், நேற்று முன்தினம் ஆவின் மேம்பாலத்தை கடந்து, குந்தாரப்பள்ளியை அடுத்த, திப்பனப்பள்ளி சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்டது. மார்கண்டேய நதிகுருபரபள்ளியில் மேம்பாலம் உள்ளது. இதை கடக்க முடியாது என்பதால், அதை ஒட்டிச் செல்லும், மார்கண்டேய நதியில், தற்காலிக சாலை அமைக்கும் பணி, நேற்று காலை துவங்கியது.ஐந்து பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன், ராட்சத கற்களை அடுக்கி, அவற்றின் மீது மண்ணைக் கொட்டும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது. இரண்டு நாளில் பணி முடியுமென்று தெரிகிறது.