உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் பக்தர்களுக்கு அனுமதி

சதுரகிரியில் பக்தர்களுக்கு அனுமதி

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பிப்.4 அன்று நடக்கும் தை அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கபடுகிறார்கள்.

சதுரகிரியில் நடக்கும் முக்கிய திருவிழாக்களில் தை அமாவாசை விழாவும் ஒன்று. ஆடி அமாவாசையன்று வரமுடியாத பக்தர்கள், தை அமாவாசையன்று இங்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம். மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை நாட்களில், பிரதோஷ தினத்திலிருந்து 4 நாட்கள் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கபடுகிறார்கள். தற்போது பிப்.4 அன்று நடக்கும் தை அமாவாசையை முன்னிட்டு இன்று காலை 6:00 மணி முதல் மலைப்பாதை திறந்து விடபட்டு பக்தர்கள் செல்ல அனுமதிக்கபடுகிறார்கள். வார விடுமுறையை ஒட்டி அமாவாசை வருவதால் அதிகளவில் பக்தர்கள் வரவாய்ப்புள்ளதால் ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கபடுகிறது.பிப்.5 மாலை 4:00 மணிக்குள் பக்தர்கள் மலையிலிருந்து கீழே இறங்கி விடவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !