மந்தாரக்குப்பம் தில்லையம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா
ADDED :2442 days ago
மந்தாரக்குப்பம்:மந்தாரக்குப்பம் அடுத்த வீணங்கேணி தில்லையம்மன் கோவில் கும்பாபிஷேக த்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.வீணங்கேணி தில்லையம்மன், தில்லை காளியம்மன், வீரம்மா காளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் (ஜன.,31ல்) மாலை, முதல் கால பூஜை, யாகசாலை பூஜை, விக்கேனஷ்வர பூஜை நடந்தது. நேற்று (1ம் தேதி) காலை 5:30 மணியளவில் இரண்டாம் கால பூஜை, கோ பூஜை, சுமங்கலி பூஜை, யாத்ரதானம், கடம் புறப்பாடு நடந்தது.
காலை 8:30 மணியளவில் 65 அடி உயரம் உள்ள தில்லையம்மனுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபி ஷேகம் நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.