கடலூரில் ஆதிபராசக்தி மன்றம் நடத்திய முப்பெரும் விழா
கடலூர்: கடலூரில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், முப்பெரும் விழா நடந்தது. சிதம்பரம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல், நோயாளிகளுக்கு உபகரணங்கள் வாங்க நிதியுதவி வழங்குதல் மற்றும் தை வெள்ளியை முன்னிட்டு, துப்புரவு பணியாளர்களுக்கு புத்தாடை வழங்குதல் என, முப்பெரும் விழா, கடலூர் செயின்ட் மேரீஸ் முதியோர் காப்பகத்தில், நேற்று (பிப்., 1ல்) நடந்தது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க மாவட்ட நிர்வாகக்குழு தலைவர் கிருபானந் தன் தலைமை தாங்கினார். டாக்டர் அர்ச்சுனன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் ஞானக் குமார் வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக கடலூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் ஜெயந்தி ரவிச்சந்திரன் கலந்து கொண்டு, 3 மாணவ, மாணவியருக்கு 50,000 ரூபாய் கல்வி உதவித் தொகையும், நோயாளிகளுக்கு உபகரணங்கள் வாங்க 50,000 ரூபாய் நிதியுதவியும், துப்புரவு பணியாளர்களுக்கு புத்தாடையும் வழங்கி பேசினார்.