பொள்ளாச்சி, பாலகாட்டில் ஸ்ரீ சங்கராபுரம் மஹா பெரியவா குருகுல கிராம சத்சங்கம்
பிப்ரவரி 1-ம் மற்றும் 2-ம் தேதியன்று ஸ்ரீ சங்கராபுரம் மஹா பெரியவா குருகுல கிராமத்தின் சத்சங்கம் பொள்ளாச்சி, நூரணி சாஸ்தா கோவில் மற்றும் புது கல்பாதியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. முதல் நாள் மாலை பொள்ளாச்சியில் ஸ்ரீ மஹா பெரியவாளுக்கு வரவேற்ப்பு இரட்டை நாயணம் மற்றும் தவிலிசையுடன் கூடிய இசைக்கச்சேரி திருமணத்தில் நடக்கும் மாப்பிள்ளையழைப்பு போல் மிக பிரம்மாண்டமாக நடந்தது. ஸ்ரீ மஹா பெரியவா பிரதமை ஆன்மீக அன்பர்களின் தரிசனத்திற்காக அனைத்து நிகழ்ச்சிகளிலும் வைக்கப்பட்டு சகல பூஜராதனைகளுடன் நடைபெற்றது.
சதபுரம் ஸ்ரீ பிரசன்னா மஹாகணபதி கோவிலிலிருந்து ஸ்ரீ மஹா பெரியவா பிரதமை ரத ஊர்வலமாக சில முக்கிய பிரதான கோவில்கள் வழியாக பஞ்சவாத்தியம் முழங்க மற்றும் வேதகோஷத்துடன் புது கல்பாதிக்கு வருகை தந்தார். மாயவரம் அருகில் கூத்தனூர் என்ற கிராமத்தனருகில் மிக வேகமாக உருவாகி வரும் ஸ்ரீ சங்கராபுரம் என்ற நூதன வேத கிராமத்தை பற்றி ஸ்ரீ வைஷ்ணவி டிரஸ்டின் மேனேஜிங் டிரஸ்டி கி.வெங்கடசுப்ரமணியன் விளக்க உரை வழங்கினார். திரளான மஹா பெரியவா பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.