உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு: தேர்வு எழுதும் மாணவர் பங்கேற்கலாம்

ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு: தேர்வு எழுதும் மாணவர் பங்கேற்கலாம்

திருப்பூர்:திருப்பூர், வீரராகவ பெருமாள் கோவிலில், பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்காக, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு யாகம், மகா அபிஷேக பூஜை, நான்கு வாரம் நடக்கிறது.திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவில் வளாகத்தில், அனைத்து  கலைகளுக்கும் அதிபதியாக விளங்கும் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர், தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.


திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், கடந்த, நான்கு ஆண்டுகளாக, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, நினைவாற்றலும், தன்னம்பிக்கையும், வெற்றியும்  வழங்க வேண்டி, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவருக்கு, சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. நடப்பாண்டு பொதுத்தேர்வு எழுதும், பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான ஹயக்ரீவர் வழிபாடு, இன்று மற்றும், 10ம் தேதிகளில் நடக்கிறது.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான  வழிபாடு, 17 மற்றும் 24ம் தேதிகளில் நடக்க உள்ளது. காலை, 9:00 மணிக்கு, சிறப்பு ஹயக்ரீவர் வேள்வி பூஜையும், 10:30 மணிக்கு, லட்சுமி ஹயக்ரீவர் திருமஞ்சனம், 11:00 மணிக்கு, நாம சங்கீர்த்தனம், 11:30 மணிக்கு, சாத்துமறை மற்றும் மகா தீபாராதனையும் நடைபெற  உள்ளது.சிறப்பு வழிபாட்டில் பங்கேற்கும் மாணவ, மாணவியர், பெயர் மற்றும் நட்சத்திர பெயரில் அர்ச்சனை செய்து, பிரசாதம் வழங்கப்படும். மாணவ, மாணவியர், ஹயக்கிரீவர் வழிபாட்டில் பங்கேற்று, அருளாசி பெற்று வாழ வேண்டுமென, திருவடி திருத்தொண்டு  அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !