உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் விழா கொடியேற்றம்

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் விழா கொடியேற்றம்

ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா, கொடியேற்ற நிகழ்ச்சியுடன் துவங்கியது.

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவில் முக்கிய ஆன்மிக தலமாகும். கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியுடன் துவங்கி, 15 நாட்களுக்கும் மேலாக குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டுக்கான குண்டம் திருவிழா, தை அமாவாசையான இன்று, 4ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் துவங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சிக்காக, சர்க்கார்பதி வனப்பகுதியிலிருந்து நேற்று முன்தினம் இரவு, 85 அடி உயரமுள்ள மூங்கில் மரம் கொண்டு வரப்பட்டு, சர்க்கார்பதி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.  அலங்கரிக்கப்பட்ட கம்பம், ஊர்வலமாக மாசாணியம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. இன்று கம்பத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காலை, 9:00 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, தினசரி சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. வரும், 17ம் தேதி நள்ளிரவு மயான பூஜையும், 20ம் தேதி காலை, 9:00 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !