திருக்கோவிலூர் திருமலை நம்பி பஜனை குழு
ADDED :2541 days ago
திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் திருமலை நம்பி பஜனை குழுவினர் 13ம் ஆண்டு திருப்பதிக்கு பாதயாத்திரை பயணம் மேற்கொண்டனர்.திருக்கோவிலூரில் இயங்கும் திருமலை நம்பி பஜனை குழுவினர் வரும் 13ம் தேதி திருப்பதியில் நடைபெறவுள்ள ரதசப்தமி விழாவில் கலந்து கொள்ளும் வகையில், நேற்று முன்தினம் (2ம் தேதி) மாலை திருக்கோவிலூரில் இருந்து பாதயாத்திரை பயணத்தை துவக்கினர்.திருக்கோவிலூர் ஆஞ்சநேயகர் கோவிலில் இருந்து புறப்பட்ட பயணத்தில் 70க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பஜனை பாடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக கண்ணன் பக்தர் தலைமையில் ஊர்வலமாக சென்று, பயணத்தை துவக்கினர்.