காளையார்கோவிலில் அருளானந்தர் சர்ச் தேர் பவனி
ADDED :2436 days ago
காளையார்கோவில்:காளையார்கோவில் தூய அருளானந்தர் சர்ச் விழா தேர்பவனி நடந்தது. ஜன., 25 ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து 8 நாட்கள் சிறப்பு திருப்பலி நடந்தது. நேற்றுமுன்தினம் (பிப்., 2ல்) இரவு 8:00 மணிக்கு அலங்கரித்த தேரில் தூயஅருளானந்தர் எழுந்தருளினார். நகரின் முக்கிய வீதிகள் வழியே தேர்பவனி வந்தது.
பங்கு தந்தை சூசை ஆரோக்கியம், உதவி பங்குதந்தை பிரிட்டோ ஆகியோர் சிறப்பு திருப்பலி, தேர்பவனியை நடத்தினர். நேற்று (பிப்., 3ல்) காலை சிறப்பு திருப்பலியுடன் விழா நிறைவு பெற்றது.