உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசிமகத் திருவிழா தொடக்கம்: தேர் கட்டுமான பணி தீவிரம்

மாசிமகத் திருவிழா தொடக்கம்: தேர் கட்டுமான பணி தீவிரம்

விருத்தாசலம் :விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமகத் திருவிழா நடக்க உள்ளதையொட்டி தேர் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வர் கோவில் மாசிமகத் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். திருவிழாவின் துவக்கமாக கடந்த பிப்ரவரி 7ம் தேதி செல்லியம்மனுக்கு கொடியேற்று விழா நடந்தது. அதனைத் தொடர்ந்து விநாயகர் உற்சவம் நடந்தது. இன்று விருத்தகிரீஸ்வரருக்கு பகல் 12.30 மணியளவில் கொடியேற்றம் நடைபெறுகிறது. இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும், தொடர்ந்து சிறப்பு விழாக்கள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா வரும் 6ம் தேதி காலை 5 மணிக்கு நடக்கிறது. அதனையொட்டி விநாயகர், விருத்தகிரீஸ்வரர், சுப்ரமணியர், விருத்தாம்பிகை அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் உலா வரும் ஐந்து தேர்களின் கட்டுமானப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் ஊழியர்கள் மற்றும் நாச்சியார்பேட்டையைச் சேர்ந்த தேர் கட்டும் பணியாளர்களைக் கொண்டு தேர் கட்டும் பணி மும்முரமாக நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !