ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவிலில் தீ மிதி விழா
ADDED :5050 days ago
ஸ்ரீமுஷ்ணம் :ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. ஸ்ரீமுஷ்ணம் சந்தைதோப்பு அருகே உள்ள அங்காள பரமேஸ்வரி பெரியாண்டவர் கோவில் மகா சிவராத்திரி உற்சவம் கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 6ம் நாள் திருவிழா தீமிதி உற்சவம் கடந்த 24ம் தேதி நடந்தது. இதில் திருக்குளத்தில் இருந்து 150க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டு கோவில் வளாகத்தில் உள்ள தீக்குண்டத்தில் தீ மிதித்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு சுவாமி வீதியுலா நடந்தது. விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.