நூக்காலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :4940 days ago
திருவள்ளூர் :காக்களூர் நூக்காலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது. திருவள்ளூர் அடுத்த, காக்களூர் வீர ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ளது நூக்காலம்மன் கோவில். இக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 25ம் தேதி காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை, தன பூஜையும், மாலை 6 மணிக்கு முதல் கால யாக பூஜையும் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து, 9 மணிக்கு புனித நீர் கொண்டு செல்லப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. காலை 11 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு உற்சவர் நூக்காலம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.