உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காமாட்சியம்மன் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்

காமாட்சியம்மன் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்

காஞ்சிபுரம் :காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் பிரம்மோற்சவம், இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். வழக்கம்போல் இந்த ஆண்டு உற்சவம், இன்று காலை 4.45 மணியிலிருந்து 6.15 மணிக்குள், கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முதல் நாளான இன்று காலை விருஷபம், இரவு மான் வாகன உற்சவம் நடைöபுறும். நாளை காலை மகரம், இரவு சந்திரப்ரபை, 29ம் தேதி காலை தங்க ஸிம்ஹம், இரவு யானை, 1ம் தேதி காலை சூர்ய பர்பை, இரவு ஹம்ஸம், 2ம் தேதி காலை பல்லக்கு, இரவு நாகம், 3ம் தேதி காலை சப்பரம், இரவு கிளி வாகன உற்சவம் நடைபெறும். ஏழாம் நாளான 4ம் தேதி காலை ரதோற்சவம் நடைபெறும். மறுநாள் காலை பத்ரபீதம், இரவு குதிரை வாகனம், 6ம் தேதி காலை ஆள்மேல் பல்லக்கு, இரவு பிரபல உற்சவமான வெள்ளி ரதம் உற்சவம் நடைபெறும். பத்தாம் நாள் காலை சரபம், இரவு கல்பகோத்யானம், 11ம் நாள் இரவு மஹா மேரு உற்சவம் நடைபெறம். 9ம் தேதி காலை 5 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !