உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரட்டானேஸ்வரர் கோவிலில் யாகசாலை பூஜை துவக்க விழா

வீரட்டானேஸ்வரர் கோவிலில் யாகசாலை பூஜை துவக்க விழா

திருக்கோவிலூர் :திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று யாகசாலை பூஜை துவங்கியது. திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசிமகப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனையடுத்து நேற்று காலை 9 மணிக்கு ஸ்ரீவிக்னேஸ்வர பூஜை, கணபதி பூஜை, கணபதி ஹோமம், மகாலஷ்மி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், பெரியானைக் கணபதிக்கு மகா அபிஷேகம் நடந்தது.பிம்மோற்சவத்திற்கான பூர்வாங்க பூஜையாக வாஸ்து பூஜை, வாஸ்து சாந்தி ஹோமம், மிருத்துசங்கிரகனம், அங்குரார்பனம், ரக்சாபந்தனம் நடந்தது. மாலை 6 மணிக்கு விநாயகர் உற்சவ மூர்த்திக்கு சோடசோபஉபச்சார தீபாராதனை நடந்தது. இதனையடுத்து விநாயகர் வீதியுலா நடந்தது. இன்று காலை 9 மணிக்குமேல் 10.30 மணிக்குள் கொடியேற்றி முதலாவது நாள் உற்சவம் துவங்குகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !