ரூ.200 கோடியை தொடும் பழநி கோயில் வருமானம் தைப்பூச விழாவில் ரூ.10.45 கோடி கிடைத்தது
பழநி:பத்து நாள் நடந்த பழநி முருகன் கோயில் தைப்பூச விழாவில், 200 ரூபாய் கட்டண தரிசனம் மூலம் ரூ.1 கோடியே 52 லட்சத்து 44 ஆயிரமும், 20 ரூபாய் கட்டணம் மூலம் ரூ.58 லட்சத்து 91 ஆயிரமும் கிடைத்துள்ளது.இது தவிர பஞ்சாமிர்த விற்பனை ரூ.3 கோடியே 34 லட்சத்து 43 ஆயிரம், உண்டியல் வருமானம் ரூ.4 கோடியே 63 லட்சத்து 82 ஆயிரம், ரோப்கார், வின்ச் மூலம் ரூ.35 லட்சத்து 51 ஆயிரம் என மொத்தம் ரூ.10 கோடியே 45 லட்சத்து 13 ஆயிரம் கிடைத்துள்ளது.
இது கடந்த 2018ம் ஆண்டு தைப்பூசவிழா வருமானத்தைவிட ரூ.2 கோடியே 78 லட்சத்து 3 ஆயிரம் அதிகமாகும். இதுபோக முடிக்காணிக்கை, தங்கு விடுதிகள், தங்கரதம், தங்க தொட்டில், காலபூஜைகள் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம் தனி. ரோப்கார், வின்ஞ் மூலம் ஆண்டுக்கு ரூ.40 கோடி, பஞ்சாமிர்தம் மூலம் ரூ.25 கோடி, உண்டியல் காணிக்கை மூலம் ரூ.25 கோடிக்கு வரை கிடைக்கிறது. பழநி கோயில் வருமானம் ரூ.200 கோடியை தொட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.