திண்டிவனம் சனிப்பிரதோஷ சிறப்பு வழிபாடு
ADDED :2435 days ago
திண்டிவனம்:சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு, இரும்பை மாகாளேஸ்வரர் கோவிலில், சிறப்பு வழிபாடு நடந்தது.வானூர் வட்டம், இரும்பை கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாகாளேஸ் வரர் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில், சனி மகா பிரதோஷத்தையொட்டி, மாலை 4:30 மணிக்கு மூலவர் மற்றும் நந்தீஸ்வரருக்கு, சிறப்பு அபிஷேகம், மகா தீபாதனை நடந்தது.சனி மகா பிரதோஷம் என்பதால் வழக்கத்தை விட, பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தை கட்டுப்படுத்த ஆரோவில் போலீஸ் சார்பில், கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது.