காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கல்வெட்டு இயல் படிப்பு துவக்கம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கல்வெட்டு இயல் சான்றிதழ் படிப்பு துவக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ் துறை யும், கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையமும் இணைந்து, கல்வெட்டு இயல் சான்றிதழ் படிப்பு துவக்கியுள்ளன.தொல் எழுத்துகள் குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மைய செயலர் சுகவனம்முருகன் பேசினார்.
தமிழ் எழுத்து வடிவங்களில் மிகவும் தொன்மையான வடிவமான, தமிழ் பிராமி எழுத்துகள் குறித்து, தொல்லியியல் ஆய்வாளர் வீரராகவன் பயிற்சி அளித்தார்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,800 ஆண்டுகளுக்கு முந்தைய, பழமை உடைய பிராமி கல்வெட்டு உள்ள, தூசி மாமண்டூ ருக்கு மாணவர்களை அழைத்து சென்றனர். அங்குள்ள பிராமி கல்வெட்டை படித்து காட்டி, படி எடுக்கும் முறை குறித்து விளக்கம் அளித்தனர்.