உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் விநாயகர் கோவிலில் பிப்., 13ல் மஹா யாகம்

காஞ்சிபுரம் விநாயகர் கோவிலில் பிப்., 13ல் மஹா யாகம்

காஞ்சிபுரம்: உக்கம்பெரும்பாக்கம் நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில், பிப்., 13ல், ராகு கேது பெயர்ச்சியையொட்டி, மஹா யாகம் நடைபெறுகிறது.ராகுவும், கேதுவும் ஒவ்வொரு ராசியிலும், ஒன்றரை ஆண்டுகள் தங்கி சுப, அசுப பலன்களை தருவர். தற்போது கடக ராசியில் ராகு பகவானும்; மகர ராசியில் கேது பகவானும் அமர்ந்துள்ளனர்.பிப்., 13ல், பகல், 1.25 மணிக்கு ராகு பகவான் கடக ராசியில் இருந்து மிதுனத்திற்கும், கேது பகவான் மகரகத்தில் இருந்து, தனுசுவுக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.

இதையொட்டி, காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலை உக்கம் பெரும்பாக்கம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில், அன்று, ராகு கேது பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுகிறது.

காலை, 9.05 மணிக்கு, நட்சத்திர விருட்ச விநாயகர், 27 நட்சத்திர அதிதேவதைகள், சனீஸ் வரருக்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து ராகு, கேது கலச ஸ்தாபனம், பெயர்ச்சி மஹா யாகம் நடைபெறுகிறது.பகல், 1.25 மணிக்கு, ராகு கேது பகவான்களுக்கு சிறப்பு கலச அபிஷேகம், மகா தீபாராதனையும் நடைபெறுகிறது. ராகு, கேது பெயர்ச்சியால் பரிகார சிறப்பு அர்ச்சனையும் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !