உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) சாதகமான காலம் வரட்டும் காத்திருப்போம்

மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) சாதகமான காலம் வரட்டும் காத்திருப்போம்

ராகு  உங்கள் ராசிக்கு பெயர்ச்சியடைவது சுமாரான நிலை தான். இனி முயற்சிக்குரிய பலன் இல்லாமல் போகலாம். கேது  7ம் இடமான தனுசு ராசிக்கு வந்திருக்கிறார். கணவன், மனைவி வகையில் பிரச்னை ஏற்படலாம். எதிரி தொல்லை குறுக்கிடலாம். குருபகவான் 6ம் இடத்தில் உள்ளதால் மனதில் தளர்ச்சி ஏற்படும். குருபகவான் 2020 மார்ச் 26ல் மகர ராசிக்கு மாறுகிறார். அப்போது பொருளாதார சரிவை ஏற்படுத்துவார். சனிபகவான் 7ம் இடமான தனுசு ராசியில் உள்ளதால் குடும்பத்தில் பிரச்னையை உருவாக்குவார். மொத்தத்தில் சாதகமான காலம் வரும் வரை பொறுமை காப்பது அவசியம். 2019 பிப்ரவரி –  அக்டோபர்குடும்பத்தில் கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். மார்ச்13க்கு பிறகு  முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.   பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் உண்டாகும். பணியாளர்களுக்கு சகஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேருவர். மே19 முதல் 2019 அக். 27 வரை அதிக சிரத்தை எடுத்தே பணியாற்ற வேண்டியதிருக்கும்.   வியாபாரிகள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். தொழில் ரீதியான அலைச்சல் அதிகரிக்கும். சனி, ராகுவால் பொருளாதார இழப்பு வரலாம். வீண் அலைச்சல் அதிகரிக்கும். குரு பக்கபலமாக இருப்பதால் எந்த விஷயத்திலும் துணிவுடன் செயல்பட்டு இறுதியில் வெற்றி காணலாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர்.  மே 19 முதல் 2019 அக்.27 வரை புதிய ஒப்பந்தம் பெறுவதில் தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்களுக்கு எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.  மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பைப் பெறுவர். விவசாயிகள் அதிக முதலீடு தேவைப்படும் பணப்பயிர்களை தவிர்ப்பது நல்லது. மஞ்சள், கேழ்வரகு, சோளம் மூலம் அதிக வருமானத்தைக் காணலாம். பெண்கள்  கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கப் பெறுவர். பிள்ளைகள் நற்செயலில் ஈடுபட்டு பெருமை சேர்ப்பர். புத்தாடை, அணிகலன்கள் வாங்க வாய்ப்புண்டு. மே 19 முதல் 2019 அக்.27 வரை எதிலும் பொறுமையுடன் விட்டுக் கொடுத்துப் போகவும். 2019 நவம்பர் –  2020 ஆகஸ்ட்குருபகவானால் முயற்சியில் வெற்றி உண்டாகும். சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். அவரது 5ம் இடத்துப் பார்வையால் பணப்புழக்கம் இருக்கும். அண்டை வீட்டார் உதவிகரமாக இருப்பர். 2020 மார்ச் 26 க்கு பிறகு எதிலும் பொறுமையுடன் விட்டுக் கொடுத்துப் போகவும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலர் இடமாற்றத்தை சந்திக்க நேரிடலாம். 2020 மார்ச்26க்கு பிறகு வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. வியாபாரிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அலைச்சலும் ஏற்படும்.  அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். ராகுவால் பொருள் விரயம் ஏற்படும். 2020 மார்ச் 26க்கு பிறகு  பண விஷயத்தில் கவனம் தேவை. கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். முன்னேற்றத்துக்கு பெண்கள்  உறுதுணையாக செயல்படுவர்.   2020 மார்ச் 26க்கு பிறகு சிரத்தை எடுத்தால் தான் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநலத் தொண்டர்கள் பிரதிபலன் எதிர்பார்க்காமல் பாடுபட வேண்டியதிருக்கும்.மாணவர்கள் சிலர் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு பெறுவர்.  போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். 2020 மார்ச்26க்கு பிறகு கல்விக்கடன் கிடைப்பதில் தாமதமாகலாம். விவசாயிகளுக்கு உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகலாம். கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானம் காணலாம். கணவரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். குருவால் உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம்.  2020 மார்ச் 26க்கு பிறகு வேலையில் பொறுமை தேவை. பரிகாரம்:* தேய்பிறை அஷ்டமியில் பைரவர் வழிபாடு* ஏகாதசியன்று பெருமாளுக்கு துளசி மாலை* சஷ்டியன்று முருகனுக்கு பால் அபிஷேகம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !