திருவள்ளூர்: தை அமாவாசையை முன்னிட்டு திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் உற்சவர் வீரராகவர் ரத்தனங்கி அலங்ரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், தை பிரம்மோற்சவம், 31ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. சாலிஹோத்ர மகரிஷிக்கு வீரராகவர் காட்சி அளித்த தினமான தை அமாவாசை விழா நடைபெற்றது. இதையொட்டி, மூலவர் தரிசனம், அதிகாலை முதல், மதியம், 12:00 மணி; பகல், 1:௦0 மணி முதல், இரவு, 8:00 மணி வரை , நடைபெறும். காலை, 5:00 மணி முதல், மதியம், 12:00 வரை உற்சவர் வீரராகவர் ரத்னாங்கி சேவை அருள்பாலித்தார். மாலை, நாச்சியார்திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.