வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
ADDED :2441 days ago
பண்ருட்டி: பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் தைமாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு பெருமாளுக்கும், உபயநாச்சியாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
பண்ருட்டி காந்திரோடு, பெருந்தேவி தாயார் சமேத வரதராஜபெருமாள் கோவிலில் மாதந்தோறும் திருவோணம்நட்சத்திரத்தில் பெருமாள், தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்றுமுன்தினம் காலை உற்சவர் பெருமாளுக்கும், தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.மாலை 6:00 மணிக்கு வரதராஜபெருமாள், உபயநாச்சியார்களுடன் திருமண கோலத்தில் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.