உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் கொங்கன சித்தர் கோவில் தை அமாவாசை பூஜை

திருப்பூர் கொங்கன சித்தர் கோவில் தை அமாவாசை பூஜை

திருப்பூர்:கொங்கன சித்தர் கோவிலில், தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை, யாகம் நடந்தது.காங்கயம், ஊதியூர் மலையில் கொங்கன சித்தர் கோவில் உள்ளது. தை அமாவாசை
முன்னிட்டு, நேற்று முன்தினம் (பிப்., 4ல்) இரவு, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

இதில், உலகம் மேன்மையடைந்து, மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்யப்பட்டது.பல அரிய மூலிகைகள் மூலம் செய்யப்பட்ட மூலிகை ரசம் வழங்கப்பட்டது. ஏராளமானோர் குடும்பத்துடன் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !