உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை மாரியம்மன் தேர்திருவிழா ஆலோசனை கூட்டம்

உடுமலை மாரியம்மன் தேர்திருவிழா ஆலோசனை கூட்டம்

உடுமலை:உடுமலை மாரியம்மன் கோவில், தேர்த்திருவிழா ஆலோசனைக் கூட்டம் நடந்தது.உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஏப்.,9ம் தேதி நோன்பு சாட்டப்படுகிறது. ஏப்., 16ம் தேதி கம்பம் போடுதலும், 25ம் தேதி திருத்தேரோட்டமும், 27ம் தேதி மகா அபிஷேகமும் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சிகளுக்கு தகுந்த ஏற்பாடுகள் செய்வும், நாள்தோறும், சுவாமி புறப்பாடு மற்றும் கலைநிகழ்ச்சிகள் குறித்து, கட்டளை தாரர்களிடம் கலந்தாலோசித்து முடிவு செய்ய தீர்மானிக்கப் பட்டது. இதற்கான ஆலோசனைக்கூட்டம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது.

இதில், கோவில் செயல் அலுவலர் சந்திரமதி, பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர் மற்றும் கட்டளைதாரர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !