பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி வழிபாடு
ADDED :2449 days ago
பண்ருட்டி:பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு சிவலிங்கத்திற்கு சிறப்பு வழிபாடு நடந்தது.பண்ருட்டி திருவதிகை அம்பாள் பெரியநாயகி சமேத
வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் பிப்., 4ல் சிவராத்திரியை முன்னிட்டு கோவில் மூலவர் சிவனுக்கும், கோவில் வளாகத்தில் உள்ள சரக்கொன்றை நாதர், லிங்கோத்பவர், பஞ்சமுகலிங்கம் உள்பட அனைத்து சிவலிங்கங்களுக்கும் மாலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இரவு 8:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.