திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தேரோட்டம்
ADDED :2448 days ago
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் தை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, தேரோட்டம் நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், தை பிரம்மோற்சவம், கடந்த, 31ம் தேதி துவங்கியது. விழாவின் ஏழாம் நாளான இன்று (பிப்.,6ல்) தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது. தேரில் உற்சவர் வீரராகவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட தேரை வடம் பிடித்தனர்.