உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காட்டுக்குள்ளே திருவிழா: பொங்கல் வைத்து பூஜை

காட்டுக்குள்ளே திருவிழா: பொங்கல் வைத்து பூஜை

வால்பாறை: காடம்பாறை வெள்ளிமுடி செட்டில்மென்ட் பகுதியில், கோவில் திருவிழாவில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.


வால்பாறை அடுத்துள்ளது காடம்பாறை அணை. இங்கிருந்து, மூன்று கி.மீ., தொலைவில் உள்ளது வெள்ளிமுடி செட்டில்மென்ட் பகுதி.இந்த பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள், ஆண்டு தோறும் அடர்ந்த வனப்பகுதியின் மத்தியில் இரண்டு கி.மீ., தொலைவில் உள்ள தவசியம்மாள் கோவில் திருவிழாவை மிக சிறப்பாக கொண்டாடுகின்றனர். நேற்று முன் தினம் துவங்கிய திருவிழாவில், காலை, 5:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. காலை, 11:00 மணிக்கு பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.மதியம், 1:00 மணிக்கு கோவில் வளாகத்தில் அன்னதானம் நடந்தது. வால்பாறை வனச்சரக அலுவலர் சக்திகணஷே், வனவர்கள் சபரி, நித்யா ஆகியோர் பங்கேற்றனர்.விழாவில், வால்பாறை, பொள்ளாச்சி மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதியை சேர்ந்த பக்தர்களும், காடம்பாறையை சுற்றியுள்ள பழங்குடின மக்களும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !