உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3) ஆடம்பர வசதி பெருகும்

மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3) ஆடம்பர வசதி பெருகும்

அனைவரிடமும் நட்பு பாராட்டும் மிதுன ராசி அன்பர்களே!

செவ்வாய் இந்த மாதம் சாதகமான இடத்தில் இருந்து நற்பலன் கொடுப்பார். சுக்கிரன் பிப்.25க்கு பிறகு நன்மை தருவார். பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர் தொல்லை மறையும். அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் வாங்கலாம். வீடு, மனை, வாகனம் வாங்கலாம்.

ராகு இப்போது உங்கள் ராசியில் இருக்கிறார். இதுவும் சுமாரான நிலை தான். இங்கு அவரால் வீண் அலைச்சல் ஏற்படலாம். உங்கள் முயற்சிக்கு பலன் இல்லாமல் போகலாம். கேது 7ம் இடமான தனுசு ராசியில் இருக்கிறார். அவர் கணவன், மனைவி வகையில் பிரச்னை, அலைச்சலைத் தரலாம். எதிரியால் பிரச்னை வரலாம். உடல்நிலை சுமாராக இருக்கும்.

குருபகவான் மார்ச்13ல் அதிசாரம் பெற்று 7ம் இடத்திற்கு செல்வது உயர்வான நிலை. குரு குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சியைத் தருவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.

பணியாளர்களுக்கு மனத்தளர்ச்சி மறையும்.  குருவின் 5ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக உள்ளது. குருவின் பார்வையால் பொருளாதார வளம் மேம்படும். புதிய பதவி கிடைக்கும்.  சூரியனால் மதிப்பு, மரியாதை எதிர்பார்த்தபடி இருக்காது. உங்கள் மீதான பொல்லாப்பு, அவப்பெயர் பிப்.25க்கு பிறகு மறையும்.  செல்வாக்கு அதிகரிக்கும்.

குடும்பத்தில் சுக்கிரனால் மாத பிற்பகுதியில் ஆடம்பர வசதி பெருகும். பெண்கள் ஆதரவுடன் செயல்படுவர். அவர்களால் நற்சுகம் கிடைக்கும். பொருளாதார வளம் கூடும். பிப்.15,16ல்  சகோதரிகளால் உதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். பிப்.22,23ல் உறவினர் வகையில் கருத்துவேறுபாடு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். ஆனால் மார்ச் 10,11ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். புதனால் சிலர் பொல்லாப்பைச் சந்திக்கலாம். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும்.  அண்டை வீட்டாரால் பிரச்னை வரலாம்.

பாதுகாப்பு தொடர்பான பணியில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். கோரிக்கைகள் நிறைவேறும். தனியார் துறையில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.  குருபார்வையால் உங்கள் திறமைக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். மார்ச் 8,9ல் சிறப்பான பலன்களை எதிர்நோக்கலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம் பிப்.25க்கு பிறகு சக பெண் ஊழியர்கள்  ஆதரவுடன் இருப்பர். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும் வெளியூரில் தங்க நேரிடலாம். சிலர் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்குவர்.  பிப்.25க்கு பிறகு புதிய வியாபாரம் ஓரளவு அனுகூலத்தை தரும். வருமானத்துக்கு குறைவிருக்காது.  பிப்.13,14,17,18, மார்ச் 12,13,14ல் முயற்சிகளில் தடைகள் வரலாம். பிப்.26,27ல் எதிர்பாராத வகையில் பணம் வரும். பகைவர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் இருக்கும்.   

கலைஞர்கள் சிரத்தையுடன் செயல்படுவது நல்லது. பிப்.25க்கு பிறகு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சிறப்பான பலனைக் காண்பர். புதிய பதவி தேடி வரும். பெண்களின் அனுகூலத்தால் சிலர் உன்னத நிலைக்கு உயர்த்தப்படுவர்.

மாணவர்களுக்கு  இனி கவலை கொள்ள வேண்டாம்.  மார்ச் 13ல் குரு சாதகமான இடத்திற்கு வருவதால் போட்டிகளில் வெற்றி காணலாம். ஆசிரியர்களின் உதவி பயனுள்ளதாக அமையும்.

விவசாயிகள் நல்ல வளத்தை காணலாம். புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் இந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொள்ளவும். நிலப்பிரச்னையில் நல்ல முடிவு கிடைக்கும். வழக்கு விவகாரத்தில் முடிவு சாதகமாக அமையும்.

பெண்கள் சிறப்பான நிலையில் இருப்பர். பிப்.19,20,21ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். பிப்.28, மார்ச்1,2ல் விருந்து விழா என செல்வீர்கள்.  பிப்.25க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். உடல்நிலை திருப்தியளிக்கலாம்.

* நல்ல நாள்: பிப்.15,16,19,20,21,26,27,28, மார்ச் 1,8,9,10,11
* கவன நாள்: மார்ச் 3,4 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 2,3
* நிறம்: வெள்ளை, சிவப்பு  

* பரிகாரம்:
*  வெள்ளியன்று ராகு காலத்தில் துர்க்கை தீபம்
*  வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை
*  சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் தரிசனம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !