உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) போட்டியில் வெற்றி

கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) போட்டியில் வெற்றி

தாயின் மீது பாசம் கொண்ட கன்னி ராசி நேயர்களே!

சூரியன், புதன், சுக்கிரன் மாதம் முழுவதும் நற்பலன் தருவார்கள். புதிய முயற்சி வெற்றி அடையும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். சமுகத்தில் மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூகநிலை ஏற்படும். புதிய உறவினரால் உதவி கிடைக்கும். பொருளாதார வளம் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தினர் சரணடையும் நிலை ஏற்படும்.

கடக ராசியில் இருந்த ராகு 10ம் இடமான மிதுன ராசிக்கு மாறுகிறார். இது அவ்வளவு சிறப்பான இடமல்ல. அவரால் பொருள் இழப்பு, உடல் உபாதை ஏற்படலாம். கேது 4ம் இடமான தனுசுராசியில் இருக்கிறார். தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். உடல்நலம் பாதிக்கலாம்.

குருபகவான் மார்ச்13ல் அதிசாரம் பெற்று 4-ம் இடமான தனுசு ராசிக்கு செல்கிறார். இந்த இடம் சிறப்பானதல்ல.  இதனால் மன உளைச்சல், வீண்பகையை உருவாக்குவார்.

குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். பிப்.25க்கு பிறகு பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். லாபம் அதிகரிக்கும். மனதில் பக்தி உயர்வு மேம்படும். பிப்.17,18ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் பிப்.28, மார்ச்1,2ல் உறவினர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும்.

பணியாளர்களுக்கு புதிய பதவி தேடி வரும். பணியிடத்தில் மதிப்பு அதிகரிக்கும். சகபெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். கோரிக்கைகள் நிறைவேறும். பிப்.25க்கு பிறகு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பிப்.15,16ல் சிறப்பான பலனைக் காணலாம்.  சனி பகவானால் சிலருக்கு பணஇழப்பு ஏற்படலாம்.  

தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் பெறும். எதிரிகளால் இருந்த முட்டுக்கட்டைகள் அகலும். பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். பிப்.19,20,21,24,25ல் சந்திரனால்  முயற்சிகளில் தடைகள் வரலாம். மார்ச் 5,6,7ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். பிப்.25க்கு பிறகு கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழிலில் லாபம் உயரும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர்.  மதிப்பு, மரியாதை கூடும்.  விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் சிறப்பான நிலையில் காணப்படுவர். அரசியல்வாதிகள் பிரதிபலன் எதிர்பாராமல் பாடுபட நேரிடும். மார்ச் 3,4ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் சிறப்பான பலனைக் காணலாம். ஆசிரியர்களின் மத்தியில் மதிப்பு உயரும். போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு பெறுவர். மார்ச்13க்கு பிறகு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.

விவசாயிகள் நல்ல விளைச்சலும் அதற்கேற்ப லாபமும் கிடைக்கும்.  ஆடு, மாடு மூலம் வருமானம் உயரும். பால் தொழிலில் முன்னேற்றம் காணலாம். வழக்கு, விவகாரத்தில் மெத்தனம் வேண்டாம்.

பெண்களுக்கு மனதில் நிம்மதி நிலைக்கும். பணிக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். பிப்.26,27ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். மார்ச் 8,9 சிறப்பான நாட்களாக அமையும். விருந்து விழா என சென்று வருவீர்கள்.  நற்சுகம் ஏற்படும். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். பிப்.25க்கு பிறகு பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும்.  சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். செவ்வாயால் உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் வரலாம்.

* நல்ல நாள்: பிப்.15,16,17,18,22,23,26,27, மார்ச் 5,6,7,8,9
* கவன நாள்: மார்ச் 10,11 சந்திராஷ்டமம்  
* அதிர்ஷ்ட எண்: 1,9
* நிறம்: பச்சை, சிவப்பு

* பரிகாரம்:   
*  ஞாயிறன்று ராகுகாலத்தில் பைரவர் பூஜை
*  வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை
*  திங்களன்று சிவபெருமானுக்கு வில்வமாலை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !