விழுப்புரம் அடுத்த திருமுண்டீச்சரம் கோவில் மகா கும்பாபிஷேகம்
விழுப்புரம்:விழுப்புரம் அடுத்த திருமுண்டீச்சரம் கிராமத்தில், வினாயகர், பாலமுருகன், பிடாரி அம்மன், திரவுபதி அம்மன், பாண்டுரங்கன் சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 10ம் தேதி மாலை 6:00 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேசபலி, கலாகர்ஷணம் முதல் கால யாக பூஜை, மஹா பூர்ணாஹூதி நடந்தது. தொடர்ந்து, நேற்று (பிப்., 11ல்) அதிகாலை 4:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை துவங்கியது.
இதையடுத்து, காலை 6:00 மணிக்குமேல் 7:30 மணிக்குள் கலச புறப்பாடு மற்றும் விநாயகர், பாலமுருகன், பிடாரி அம்மன், திரவுபதி அம்மன், பாண்டுரங்கன் சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.விழாவிற்கு, பாதூர் வாசுதேவன் பிறைசூடா பித்தன் தலைமை தாங்கினார். மல்லிகாபுரம் யோகிராம் சங்கர் சுரேஷ் நரேந்திர சுவாமிகள் முன்னிலை வகித்தனர். இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.