மனிதனுக்கு மறுபிறவி உண்டா?
ADDED :2527 days ago
‘எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்’ என்கிறாள் ஆண்டாள். ‘எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்’ என்கிறார் மாணிக்கவாசகர். ‘எழுகடல் மணலை அளவிடில் அதிகம்எனது இடர் பிறவி’ என்கிறார் அருணகிரிநாதர். இதனால், மறுபிறவி நிச்சயம். ஆனால், ஏழுபிறவி என்று கூறுவதற்கில்லை. பாவபுண்ணிய கணக்கு தீரும் வரை பிறவிச் சங்கிலி நம்மைத் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.