தொழுகையை விட உயர்ந்தது
ADDED :2447 days ago
குர்ஆனை படிக்க அதிக நேரம் ஒதுக்க வேண்டும். குர்ஆனை படிப்பவர் இறைவனுடன் பேசிக் கொண்டிருப்பதாக பொருள்.“ஒருவர் திருக்குர்ஆனை ஓதுவதிலேயே முழுமையாக ஈடுபட்டு இருக்கிறார். என்னிடம் துஆ (பிரார்த்தனை) புரிவதற்குக் கூட அவருக்கு நேரமில்லை என்றாலும், என்னிடம் வேண்டிப் பிரார்த்திப்போரை விட, இத்தகைய அடியானுக்கு அவன் (இறைவன்) என்னிடம் கேட்காமலேயே அதிகமாக (நன்மை) வழங்குகிறான்,” என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்கூறுகிறார்கள். இதில் இருந்து குர்ஆன் ஓதுவது, தொழுகையை விட உயர்ந்தது என்பது தெரியவருகிறது. மேலும், “திருக்குர்ஆனை ஓதும் ஒரு அடியவர், மற்றவர்களை விடவும் அல்லாஹ்விடம் அதிக நெருக்கத்தைப் பெறுகின்றார்,” என்கிறார்கள் நாயகம் (ஸல்) அவர்கள்.