பழநி மாரியம்மன் கோயில் கொடியேற்றம்
பழநி: பழநி மாரியம்மன்கோயில், மாசித்திருவிழாவில் கொடியேற்றமும், கம்பத்திற்கு பூவோடு வைக்கும்விழாவும் நடந்தது. பழநி கிழக்குரதவீதி மாரியம்மன்கோயில் மாசித்திருவிழா பிப்.,1ல் துவங்கி 21 வரை நடக்கிறது. இதில் திருக்கம்பம் அலங்கரிக்கப்பட்டு அதற்கு புனித நீர், பால் ஊற்றி பக்தர்கள் வழிபடுகின்றனர். நேற்று கொடியேற்றத்தை முன்னிட்டு மாரியம்மன் சன்னதியிலுள்ள கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்து இரவு கொடியேற்றம் நடந்தது.
திருக்கம்பத்தில் பூவோடு (தீச்சட்டிகள்) வைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு தங்கமயில் வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று அடிவாரம் அழகுநாச்சியம்மனுக்கு காலை திருக்கல்யாணமும், அதைதொடர்ந்து அம்பாள் புதுச்சேரி சப்பரத்தில் உலா வருதல் நடக்கிறது.மாரியம்மன்கோயிலில் பிப்.,19ல் திருக்கல்யாணம், பிப்.,20ல் தேரோட்டமும் நடக்கிறது. ஏற்பாடுகளை இணைஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், கண்காணிப்பாளர் முருகேசன் செய்கின்றனர்.