சனிபகவானுக்கு அர்ச்சனை செய்த பிரசாதத்தை வீட்டிற்கு எடுத்து வரக்கூடாதா ஏன்?
ADDED :5082 days ago
பிரசாதம் என்ற சொல் உயர்ந்தது. சுவாமிக்குப் படைத்த பொருளே பிரசாதமாகிறது. சனீஸ்வரரை சுவாமியாக எண்ணியே வழிபடுகிறோம். பிறகு பிரசாதத்தை வீட்டுக்குக் கொண்டு செல்வதில் என்ன யோசனை? எல்லா கிரகங்களும் நமக்கு நன்மை செய்பவையே. சனீஸ்வரரின் பிரசாதத்தை வீட்டுக்கு தாராளமாக எடுத்துச் செல்லலாம்.