காமலாபுரம் அருகே அருளப்பர், அந்தோணியார் ஆலய திருவிழா
ADDED :2487 days ago
கொடைரோடு:காமலாபுரம் அருகே சக்கையநாயக்கனூரில், திருமுழுக்கு அருளப்பர், அந்தோணியார் ஆலய திருவிழா நடந்தது.
புனிதர்களின் கொடி ஊர்வலத்தை தொடர்ந்து, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து நவநாள் திருப்பலி, சிறப்பு கூட்டுப்பிரார்த்தனை, ஆராதனைகள் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக திருவிழா கூட்டுத்திருப்பலி, புனிதர்களின் ரத ஊர்வலம், நற்கருணை ஆராதனை, பகல் சப்பர ஊர்வலம் நடந்தது. விழாவை முன்னிட்டு வாணவேடிக்கை, கலைநிகழ்ச்சிகள் நடந்தது.