உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புல்லாணி கோயிலுக்கு திருக்குறுங்குடி ஜீயர் சுவாமி

திருப்புல்லாணி கோயிலுக்கு திருக்குறுங்குடி ஜீயர் சுவாமி

திருப்புல்லாணி:திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயில் வைணவ திவ்யதேசங்களில் 44வதாக திகழ்கிறது.

நேற்று (பிப்., 12ல்) காலை 9:00 மணிக்கு திருக்குறுங்குடி மடத்தின் ஜீயர் எம்பெருமானார் சுவாமிகள் திருப்புல்லாணிக்கு ரதசப்தமியை முன்னிட்டு மங்களாசாசனம் (விஜயம் செய்தல்) வருகை தந்தார்.

ராமநாதபுரம் சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், செயல் அலுவலர் ராமு, கோயில் பேஷ்கார் கண்ணன், வாசன், ரகுவீரதயாள், ரகுநாதபட்டர், ஜெயராம் பட்டர் ஆகியோர் பூரண கும்ப, குடை பரிவார மரியாதையுடன் வரவேற்றனர்.

பெருமாள் கோயில் உள்ள சன்னதிகளில் மங்களாசாசனம் செய்த பின் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தில் உள்ள தேசிகன், லட்சுமி ஹயக்கீரிவர் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண ஜெகநாதப்பெருமாள் உற்ஸவ மூர்த்திகள் கோயில் அருகே உள்ள திருக்குறுங்குடி ஜீயர் மடத்திற்கு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !