கசவனம்பட்டியில் கன்னிமூல கணபதி, கும்பாபிஷேகம்
ADDED :2789 days ago
கன்னிவாடி:கசவனம்பட்டியில் கன்னிமூல கணபதி, ஸ்ரீ பூர்ண, புஷ்கலா சமேத அய்யனார், கருப்பணசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கிய
விழாவில், மகா லட்சுமி, நவக்கிரக ஹோமங்களுடன் இரு கால யாக பூஜைகள் நடந்தது. சிறப்பு பூஜைகளுக்குப்பின், கும்பத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. மூலவருக்கு, விசேஷ மலர்
அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.