உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை நவஜோதிர் லிங்கம் தனிரயில் வசதி

சென்னை நவஜோதிர் லிங்கம் தனிரயில் வசதி

சென்னை:நவஜோதிர் லிங்கங்களை தரிசிக்க, இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., தனி சுற்றுலா ரயிலை இயக்குகிறது.இந்த ரயில், மதுரையில் இருந்து, வரும், 28ல் புறப்பட்டு, திண்டுக்கல், திருச்சி, விருதாசலம், விழுப்புரம், சென்னை வழியாக செல்லும்.

இப்பயணத்தில், ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலம்; மஹாராஷ்டிராவில், பார்லி வைத்யநாத், அவுங்நாக்நாத், குருஷ்னேஷ்வர், பீம்சங்கர், திரையம்பகேஷ்வர்; குஜராத்தில், சோம்நாத்; மத்திய பிரதேசத்தில் மஹாகாலேஷ்வர், ஓம்காரேஷ்வர் ஆகிய, நவஜோதிர்லிங்க கோவில்களுக்கு சென்று வரலாம்.சுற்றுலா, 12 நாட்கள் உடையது. ஒருவருக்கு, 14 ஆயிரத்து, 175 ரூபாய் கட்டணம். மேலும் விபரங்களுக்கு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள, ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகத்தை, 90031 40680, 90031 40681 என்ற, மொபைல் போன் எண்களிலும், www.irctctourism.com என்ற, இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !