சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் வளாகத்தில் திருவாசகம் முற்றோதுதல்
ADDED :2504 days ago
ஆண்டிபட்டி:சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் வளாகத்தில் திருவாசகம் முற்றோதுதல் விழா நடந்தது. இப்பகுதி சிவன் கோயில் வளாகத்தில் இருந்து சிவனடியார்கள் கைலை வாத்தியம் முழங்க சக்கம்பட்டியில் வீதி உலா சென்றனர். கோயில் வளாகத்தில் பக்தர்கள் அமர்ந்து திருவாசகம் பாடி, சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செய்தனர். ஏற்பாடுகளை டி.சுப்புலாபுரம் சிவனடியார்கள் செய்தனர்.