உத்தரகோசமங்கை கோயில் உண்டியல் எண்ணிக்கை
ADDED :2504 days ago
உத்தரகோசமங்கை:உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி அம்மன் சமேத மங்களநாதர் கோயில் பழமையும், புரதான சிறப்பும் பெற்ற சிவாலயமாக விளங்குகிறது.
கோயிலில் நேற்று (பிப்., 13ல்) காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை உண்டியல் எண்ணும் பணி நடந்தது. இந்துசமய அறநிலையத்துறையின் (பரமக்குடி) ஆணையர் ராமசாமி, ஆய்வாளர் கர்ணன், சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், செயல் அலுவலர் ராமு, பேஷ்கார் கண்ணன் மற்றும் சமஸ்தான தேவஸ்தான ஊழியர்கள்,உத்தரகோசமங்கை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். 8 லட்சத்து 29 ஆயிரத்து 727 ரூபாய் டிச.,ல் நடந்த ஆருத்ரா தரிசன சிறப்பு உண்டியல் வசூல் 1 லட்சத்து 34 ஆயிரமும் கிடைக்கப்பெற்றது.
சமஸ்தானத்தின் துணை கோயிலான வராகி அம்மன் கோயிலில் உண்டியல் வசூலாக 1 லட்சத்து 94 ஆயிரத்து 511 ரூபாயும் வருவாய் கிடைத்தது.