உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூரில் கந்தசுவாமி கோவிலில், தேரோட்டம்

திருப்போரூரில் கந்தசுவாமி கோவிலில், தேரோட்டம்

திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், மாசி பிரம்மோற்சவ தேரோட்டம், நாளை (பிப்., 16ல்) நடைபெறுகிறது.

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், மாசி பிரம்மோற்சவ பெருவிழா, 10ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.புருஷாமிருகம், ஆட்டுக்கிடா உள்ளிட்ட வாகனங்களில், காலை, இரவில், உற்சவர் வீதியுலா வருகிறார். பிரதான விழாவான தேரோட்டம், நாளை (பிப்., 16ல்) நடைபெறுகிறது.

விழாவை ஒட்டி, நிழற்கூரையுடன் மூடி வைக்கப்பட்டிருந்த தேரின் பக்கவாட்டு தகடுகள் அகற்றப்பட்டு, தூய்மைபடுத்தும் பணி நடக்கிறது. தேர் செல்வதற்கு ஏற்ப, மாடவீதி சாலையில் உள்ள பள்ளங்கள் சீரமைக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !