உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் எண்ணிக்கை

சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் எண்ணிக்கை

சாத்தூர்:சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல்கள் நேற்று (பிப்., 15ல்) திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிடும் பணி நடந்தது.

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உள்ள 5 உண்டியல்கள் நேற்று (பிப்., 15ல்)  பரம்பரை அறங்காவலகுழு பூஜாரிகள், கோயில் செயல்அலவலர் கருணாகரன், மடப்புரம் கோயில் உதவி ஆணையாளர்  செல்வி, பரமக்குடி கோயில் உதவி ஆணையாளர் ராமசாமி ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது.

ஓம் சக்தி வார வழிபாட்டுக்குழுவை சேர்ந்த பெண் பக்தர்கள், கோயில் அலுவலர்கள், ஊழியர்கள் காணிக்கை பொருட்களை கணக்கிட்டனர். உண்டியலில் கடந்த ஒரு மாதத்தில் பக்தர்கள் ரொக்கமாக ரூ 31 லட்சத்து 24 ஆயிரத்தி 119, தங்கம் 132 கிராம், வெள்ளி 372 கிராம் காணிக்கை செலுத்தியிருந்தனர். உண்டியல் திறப்பை முன்னிட்டு போலீசார் பாதுகாப்புப பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !