தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில்அஷ்டமி பூஜை
ADDED :2523 days ago
தாண்டிக்குடி:தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. விழாவில் காலபைரவருக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் பஜன் நடந்தன.சொர்ணாபிஷேகம், பக்தர்கள் மிளகு, தேங்காய், நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முருகன் கோயில் சீரமைக்கும் பணி மந்தகதியில் நடப்பதால் குண்டு, குழியுமான ரோட்டில் வெளிமாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வாகனங்களில் வந்து செல்ல சிரமப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் ரோட்டை துரிதமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.