நத்தம் காந்திநகரில் உள்ள அம்மன் கோயில் விழா
ADDED :2524 days ago
நத்தம்:நத்தம் காந்திநகரில் உள்ள மலையாளத்து கருப்பு, மந்தையம்மன் கோயில் திருவிழா நடந்தது.அழகர்மலையில் இருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்தம் சந்தனக்கருப்பு கோயிலில் இருந்து அழைக்கப்பட்டது. தொடர்ந்து காப்பு கட்டுதல், முளைப்பாரி எடுக்கு நிழ்ச்சிகள் நடந்தது. இதையடுத்து அக்னி சட்டி எடுத்தல், பொங்கல் வைத்து கிடா வெட்டுதல், உள்ளிட்ட வைபங்கள் நடந்தன. மஞ்சள் நீராட்டு, கரகம் அம்மன் குளம் சென்றடைதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவடைந்தது.