உப்பிட மங்கலம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
குளித்தலை: குளித்தலை அடுத்த, உப்பிட மங்கலம் அரசு மேல் நிலைப்பள்ளி அருகே உள்ள மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை (பிப்., 17ல்) நடக்கிறது. இதற்காக தீர்த்தக் குட ஊர்வலம் நேற்று (பிப்., 15ல்) நடந்தது. நேற்று (பிப்.,15ல்) காலை, 11:00 மணியளவில், கிராம பொதுமக்கள், புலியூர் காவிரி ஆற்றில் இருந்து, குடங்களில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்தனர்.
உப்பிடமங்கலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மாரியம்மன் கோவிலை அடைந்தனர். அங்கு, புனித நீர் ஊற்றி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், ரெங்கபாளையம், பாறைப்பட்டி, கருப்பபாளையம், சின்னகவுண்டனூர் உட்பட ஒன்பது கிராமங்களைச் சேர்ந்த, 500க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். இன்று (பிப்., 16ல்)காலை, யாகசாலையில் இரண்டாம் கால பூஜையும், மாலையில் மூன்றாம் கால பூஜை நடக்கிறது. நாளை (பிப்., 17ல்) காலை, 8:30 மணியளவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.