உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கம்மாபுரம் திரவுபதியம்மன் கோவிலில் 21ல் அரவாண் களபலி

கம்மாபுரம் திரவுபதியம்மன் கோவிலில் 21ல் அரவாண் களபலி

கம்மாபுரம்: கம்மாபுரம் அடுத்த ஊ.கொம்பாடிக்குப்பம் பொன்னாலகரம் கிராமத்திலுள்ள திரவுபதியம்மன் பக்தர்களுக்கு, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.திரவுபதியம்மன் கோவிலில், 147வது ஆண்டு தீமிதி உற்சவத்தையொட்டி, கடந்த 10ம் தேதி கொடியேற்றமும், காப்புகட்டும் நிகழ்ச்சி நடந்தது. 8வது நாளை முன்னிட்டு, நேற்று (பிப்., 17ல்) அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். முக்கிய நிகழ்வாக வரும் 21ம் தேதி காலை 11:00 மணிக்கு அரவாண் களபலி நிகழ்ச்சியும், மாலை 5:00 மணியளவில் தீமிதி உற்சவம் நடக்கிறது. 22ம் தேதி மஞ்சள் நீர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !