சி.என்.பாளையம் பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ பூஜை
ADDED :2461 days ago
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு,சி.என்.பாளையம் பகுதியில் உள்ள சிவாலயங்களில் நேற்று (பிப்., 17ல்) பிரதோஷ பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர், சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர், மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாதர் ஆகிய கோவில்களில் நேற்று (பிப்., 17ல்) பிரதோஷ பூஜை நடந்தது.
பூஜையை முன்னிட்டு நேற்று (பிப்., 17ல்) மாலை 5:00 மணிக்கு விநாயகர்,பிரதோஷ நாயகர், நந்தி, ஈஸ்வரர், அம்மன், வள்ளி தேவசேனா சுப்ரமணியர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. 6:00 மணிக்கு பிரதோஷ நாயகர் ஆலய உலாவாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.