உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவில் திருவிழா

பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவில் திருவிழா

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே புளியம்பட்டி உச்சி மாகாளியம்மன் கோவிலில், திருவிழா நேற்று காலை, 7:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலையில், நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, 24ம் தேதி காலை, 8:00 மணிக்கு கடத்துார் சிவன் கோவிலில், தீர்த்தம் கொண்டு வர புறப்படுதல் நிகழ்ச்சியும், 26ம் தேதி இரவு, 7:00 மணிக்கு பெரிய விநாயகர் கோவிலில் இருந்து அம்மன் அழைத்து வருதல், இரவு, 8:00 மணிக்கு மேல், சக்தி கும்பம் கொண்டு வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து, 27ம் தேதி பொங்கல், மாவிளக்கு கொண்டு வந்து அம்மனை தரிசித்தல், பூவோடு எடுத்தல்; இரவு, 8:00 மணிக்கு கும்பஸ்தானம் கங்கையில் விடுதல் உள்ளிட்ட பூஜையும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !