உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோரக்கர் சித்தர் பீடத்தில் பவுர்ணமி யாக பூஜை

கோரக்கர் சித்தர் பீடத்தில் பவுர்ணமி யாக பூஜை

வில்லியனுார் : வில்லியனுார் அருகே மகான் கோரக்கர் சித்தர் பீடத்தில் பவுர்ணமி யாக பூஜை நேற்று நடந்தது.வில்லியனுார் -பாகூர் சாலையில் கோர்க்காடு கிராமத்தில் உள்ள மகான் கோரக்கர் சித்தர் பீடத்தில் பவுர்ணமி யாக பூஜை மற்றும் ஆறாம் ஆண்டு துவக்க விழா நேற்று நடந்தது.விழாவை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு மேல் பவுர்ணமி யாக பூஜையும், காலை 10:00 மணியவில் மகா அர்ச்னை மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. நள்ளிரவு 12:00 மணிக்கு உச்ச கால பூஜை நடந்தது. இன்று (20ம் தேதி) மாலை 5:00 மணிக்கு மகா யாகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !